உலகின் மிகசிறந்த புகைப்படமாக "பட்டாம்பூச்சிகளால் சூழப்பட்ட கொரில்லா" தெரிவு

Prasu
4 years ago
உலகின் மிகசிறந்த புகைப்படமாக "பட்டாம்பூச்சிகளால் சூழப்பட்ட கொரில்லா" தெரிவு

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் இங்கிலாந்தின் அனுப் ஷா என்ற புகைப்பட கலைஞரால் எடுக்கப்பட்ட, பட்டாம்பூச்சிகளால் சூழப்பட்ட கொரில்லாவின் புகைப்படம் 'தி நேச்சர் கன்சர்வன்சி - 2021'ன் உலகளாவிய புகைப்படப் போட்டியில் உயர்ந்த விருதினை வென்றுள்ளது.

கொரோனா நெருக்கடி தாமதங்களுக்கு பிறகு 'தி நேச்சர் கன்சர்வன்சி' அமைப்பு நடத்திய உலகளாவிய புகைப்பட போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டுள்ளது. தி நேச்சர் கன்சர்வன்சி அமைப்பு 72 நாடுகளில் இயங்கும் உலகளாவிய இயற்கை பாதுகாப்பு அமைப்பாகும், இந்த அமைப்பு ஆண்டுதோறும் புகைப்பட போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியில் 158 நாடுகளை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் பங்கேற்றன.

உயர்ந்த விருதினை( grand prize) வென்ற இந்த புகைப்படம் மத்திய ஆப்பிரிக்க குடியரசில் உள்ள பாங்கா ஹோகோ, ஜங்கா-சங்கா எனும் அடர்ந்த வனப்பகுதியில் எடுக்கப்பட்டது. முதல் பரிசு வென்ற புகைப்பட கலைஞருக்கு $ 4,000 மதிப்புள்ள ஒரு கேமரா தொகுப்பு பரிசாக வழங்கப்படும். அதேபோல இப்போட்டியில் சிறந்த புகைப்படங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு தனிநபர் முதல் மற்றும் இரண்டாம் இட வெற்றியாளர்களுக்கும்ம் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4